ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் கதை ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது.
இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் முன்னதாக தான் நடித்த தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கதப்பாத்திரத்திற்கு ஜடல் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கயாடு லோஹர் ஒரு அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.