‘அருவி’ புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி தனது 25வது படமாக நடித்துள்ள ‘சக்தி திருமகன்’ வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இயக்குனர் சசி, ‘பிச்சைக்காரன்’ படத்தின் கதையை எனக்கு சொன்னபோது, என் கண்களில் நீர் பெருகியது.

அந்த படம் சோகக் கதை அல்ல. ஆனால், அது மிகுந்த உணர்ச்சிப் பூர்வமானது. இதே போன்ற உணர்வை மீண்டும் எனக்கு தரக்கூடிய இன்னொரு கதையை சசி எனக்கு கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் அந்த படம் விரைவில் உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் திரைப் பயணத்தில் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது ‘பிச்சைக்காரன்’ படம். அந்த படம் தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் பெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.