நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘மாமன்’, கடந்த மே 16ஆம் தேதி திரைக்கு வந்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜ் ஆவார். தற்போது, இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஹேஷாம் அப்துல் வஹாப்.
இந்நிலையில், சூரியின் சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், நடிகர் சூரியும், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் கலந்துகொண்டனர். பொதுமக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, திருவிழா நடனக் கலைஞர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தனர். அந்த நிகழ்வுகளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.