இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி தனது 33வது திரைப்படமாக “தி பாரடைஸ்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘தசரா’ படத்தைப் போலவே, இதில் நானியும் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரத்திற்கு ‘ஜடல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முதல் “கிளிம்ப்ஸ்” வீடியோவை, படக்குழு சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த வீடியோ, இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்யாசமான தோற்றம், அவரது உடல் மொழி மற்றும் நடிப்பு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
இந்நிலையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் ஒரு அதிரடி மற்றும் ஆக்ஷன் கதையம்சத்துடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டரில் நானி, இரட்டை ஜடையுடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறார். அவரின் பின்னணியில் பல துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் காட்சியளிக்கின்றன. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படம், 2026 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.