ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகர் அப்பாஸ் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.
இத்திரைப்படத்தை இயக்குபவர், புதிதாக இயக்குநராக அறிமுகமாகும் மரியராஜா இளஞ்செழியன். இந்தப் படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு, அப்பாஸ் திரையுலகில் மீண்டும் ‘ரீ என்ட்ரி’ செய்கிறார். இதில் ஜி.வி. பிரகாஷும், கவுரி பிரியாவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பியாண்டு பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜெயவர்த்தனன் தயாரிக்கும் இந்த படம் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைக்கிறவர் ஜஸ்டின் பிரபாகரன் ஆவார்.