குபேரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் நாகார்ஜுனா ஜப்பானில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். அங்குள்ள சினிமா ரசிகர்கள் இவரை ‘நாக்-சமா’ என்று அன்புடன் அழைக்கின்றனர். ‘சமா’ என்பது ஜப்பானிய கலாச்சாரத்தில் கடவுள்கள் அல்லது மிகவும் மதிக்கப்படுபவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.கடந்த மாதம் வெளியான ‘குபேரா’ திரைப்படத்தில் தீபக் என்ற கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்துள்ள விதம், ஜப்பானிய ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏற்கெனவே பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு ஜப்பானில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், நாகார்ஜுனாவுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
