கல்லூரியில் பயின்றபோதிலிருந்தே சினிமாவை நோக்கி தீராத ஆர்வம் கொண்டிருந்தவர் கன்னட ஸ்டார் கிச்சா சுதீப். அவருக்கு ஒரு கண்டிப்பான தந்தை இருந்தார். அவர் நடித்த முதல் படம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து சில படங்களில் தோல்வியால் பாதிக்கப்பட்டதும், அவர் சீரியல்களுக்கு சென்றார். ஆனால் சீரியல்களிலும் துணை கதாபாத்திரமே கிடைத்தது. இந்நிலையில், அவர் அதிலும் முழுமையாக திறமையை காட்ட வேண்டும் என முடிவெடுத்து நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அந்நேரத்தில் தமிழில் ஒரு திரைப்படம் மிகுந்த ரசிகர்களால் பாராட்டப்பட்டு திரையில் வெற்றிகரமாக ஓடியது. ஆனால், ஆரம்பத்தில் அந்த படம் இரண்டு முறை வெளியானும் வெற்றியடைய முடியாமல் இருந்தது. பின்னர் படத்திற்கு பிக்-அப் கிடைத்தது. அவர் அந்தப் படத்தை பார்த்ததும், அதனை கன்னடத்தில் ரீமேக் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தார். அந்த தமிழ் படம் தான் விக்ரம் நடித்த ‘சேது’.
அந்த படத்தின் மூலம் தமிழில் விக்ரம் “சியான்” என்ற பட்டத்தை பெற்றதுபோல், கன்னடத்தில் சுதீப்பிற்கு “கிச்சா” என்ற பெயர் கிடைத்தது. இது அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ‘கிச்சா’ படத்தில் நடித்தபோது அவரது கால் முறிந்தது. அந்த வலியோடும் அவர் நடித்தார்.
படத்தை திரையரங்கில் பார்வையிட சென்றபோது, யாரும் அங்கில்லை. ஆனால் தியேட்டர் மேனேஜர் அவரைப் பார்த்து “வாழ்த்துகள் சார்” என்றார். அப்பொழுது ஒரு ரசிகர் அவரைப் பார்த்தவுடன் “நீங்கள் தானே கிச்சா” என்று அழைத்ததும், அவருக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது. அப்போது அவருடைய நடிப்புப் பயணம் உச்சக்கட்டத்தை எட்டியது. இப்போதும் அந்த நினைவுகள் அவருக்கு மிக முக்கியமானவை என்று அவர் நமது Touring Talkies சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.