2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது வாழ்க்கையில் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இந்த விருது, அட்லி இயக்கத்தில் அவருடைய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் விஜயராகவன் ஆகியோர் தேசிய விருதை பெற்றதையடுத்து, முன்னணி நடிகர் மோகன்லால் இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதோடு, தேசிய விருதைப் பெற்ற ஷாருக்கானுக்கும் மோகன்லால் தனது வாழ்த்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஷாருக்கான், தேங்க்யூ மோகன்லால் சார், நன்றி” என கூறி, மேலும் “ஒரு மாலை நேரத்தில் உங்களை நேரில் சந்தித்து உரையாடி, உங்களை கட்டியணைக்கலாமா? என்றும் தனது எண்ணத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளார்.