லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. தன் முதல் படமாகவே மிகப் பெரிய வெற்றியை பெற்ற இவர், தனது நேர்த்தியான இயக்கத்தால் ‘லப்பர் பந்து’ படத்தை மிகவும் ரசிக்கத்தக்கவாறு உருவாக்கினார்.

இந்நிலையில், தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக எந்த திரைப்படத்தை இயக்குகிறார்? யாரை வைத்து இயக்குகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும்விதமாக, தற்போது அவர் நடிகர் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, “தனுஷுடன் நேரில் பேசிச் சந்தித்து, அவருக்காகவே தனித்துவமான ஒரு கதையை எழுதி வருகிறேன். இது ரசிகர்களையும், பொதுவான மக்களையும் சமமாக திருப்திப்படுத்தக்கூடிய படமாக இருக்கும். லப்பர் பந்து படத்தைவிட கூடுதல் சிறப்புடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.