மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். குறிப்பாக, தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் துல்கர் சல்மானின் 41வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்குகிறார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார். இப்படத்தை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நானி, இயக்குனர்கள் ஸ்ரீகாந்த் ஒடிலா மற்றும் புச்சி பாபு சனா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.