Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

ஒரு பாடலின் கம்போசிங்-ல் எனக்கு சாட் ஜிபிடி தான் உதவியது… அனிருத் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது தமிழில் ‛கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர்- 2, ஜனநாயகன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், தெலுங்கில் ‛கிங்டம்’ படத்தை அடுத்து ‛தி பாரடைஸ், டாக்ஸிக், கிங்’ என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.இந்த நிலையில், அனிருத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஒருமுறை ‛சாட் ஜிபிடி’-ஐ பாடலுக்காக பயன்படுத்தியதாக  தெரிவித்துள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் ஒரு பாடலுக்கு கம்போசிங்கில் நான் ஈடுபட்டிருந்த போது இரண்டு வரிகளில் சிக்கிக்கொண்டேன். அப்போது அதை சாட் ஜிபிடி-க்கு எடுத்துச் சென்று நான் எனக்கு உதவுமாறு கேட்டேன். அப்போது சாட் ஜிபிடி எனக்கு சுமார் 10 ஆப்ஷன்களை வழங்கியது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எனது இசைப் பணியை தொடர்ந்தேன்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அனிருத்.

அதோடு சில சமயங்களில் கிரியேட்டிவ் பிளாக்கால் சரியான இசை தொகுப்புகள் கிடைக்காமல் தவிக்கும் போது இதுபோன்று ஏஐ-யின் உதவியை நாடுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை என்கிறார் அனிருத்.

- Advertisement -

Read more

Local News