சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் அமீர்கானும் நடித்துள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

ரஜினி சாருடன் பயணித்த இரண்டு ஆண்டுகள், அனுபவங்களால் நிறைந்துள்ளன. என் வாழ்க்கையை மாற்றியுள்ளன. உங்களுடைய 50 ஆண்டுக்கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் அதே ஆகஸ்ட் மாதத்தில் ‘கூலி’ திரைப்படம் வெளியாவது பெருமையாக உள்ளது. இந்த தருணம் என்றென்றும் போற்ற வேண்டியது. இப்படம் உருவாக காரணம் அனிருத். அனிருத் எனக்குச் சகோதரர் போன்றவர் என்றார்.
மேலும், என் அப்பா ஒரு பேருந்து நடத்துனர். அவருடைய ‘கூலி’ எண் 1421. இந்த எண்ணை தான் கூலி படத்தில் ரஜினி சாருக்குப் பயன்படுத்தி உள்ளேன். இது என் தந்தைக்கு நான் செலுத்தும் டிரிப்யூட் ஆக நினைக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் .