‘கனா’ திரைப்படத்திற்கு பிறகு, 2019-ஆம் ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் தர்ஷன். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற படத்தில் தர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ராஜவேல் எழுதி, இயக்கியுள்ளார். விஜய் பிரகாஷ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். ப்ளே ஸ்மித் நிறுவனம் மற்றும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இப்படம் நேற்று வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகன் வீடு வாங்குகிறார். ஆனால் அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால், படம் ஒரு காமெடி ஹாரர் வகையில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை பார்த்த இயக்குநர் எச். வினோத், படக்குழுவினரிடம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.