இசையமைப்பாளர் அனிருத்திடம் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு நாள் யார் கண்ணுக்கும் தெரியாத வரம் பெற்றால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அனிருத், அப்படி யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்தால் முதலில் பஸ்ஸில் பயணிப்பேன்.பள்ளி, கல்லூரி நாட்களில் எப்படி பயணித்தோமோ, அப்படியே பயணிக்க விரும்புகிறேன். அதை இப்போது மிஸ் செய்கிறேன். வெளிநாட்டிற்குச் சென்றால் என்னால் அதைச் செய்ய முடியும். ஆனால், இந்தியாவில் அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை எனக் கூறியுள்ளார்.
