சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எனது சிறு வயதிலேயே நான் நடிக்க வந்துவிட்டேன். சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிந்ததால், என் கவனம் வெள்ளித்திரைக்கு செல்லவில்லை. என்னுடன் நடித்த தேவதர்ஷினி போன்றவர்கள் சரியான நேரத்தில் வெள்ளித்திரையில் தலைகாட்டி வந்தார்கள். சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையையும் பயன்படுத்தி நடித்ததால், சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. சில நேரம் இப்படி நடித்தது தவறுதான் என்றும் எண்ணிக்கொள்வேன்” என்றார்.
