அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘பார்க்கிங்’. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும் கதாநாயகியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.திரில்லர் மற்றும் டிராமா கலந்த கதையை கொண்ட இப்படத்தை ‘பலூன்’ பட இயக்குநர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

வாடகை வீட்டில் வசிக்கும் நபரும், வீட்டின் உரிமையாளருமான நபரும் இடையில் கார் பார்க் செய்வது குறித்தே உருவாகும் மோதல்களை மையமாகக் கொண்டதே இந்தத் திரைப்படத்தின் கதை. இந்நிலையில் 2023 ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த திரைக்கதைக்கான விருதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனும் அதேபோல், சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ். பாஸ்கரும் பெற்றுள்ளனர்.