மலையாள சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் அனுஸ்ரீ. தைரியமான கதாபாத்திரங்களில் நடிக்கத் துடிப்புடைய இவர், பல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு துணிக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்பட இருப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பரிசு அறிவிக்கப்பட்டபோது, அதே பெயர் கொண்ட வயதான ஒருவர் மேடைக்கு ஏறி பரிசை பெற விரைந்தார். ஆனால், பரிசு பெற வேண்டிய நபர் அவர் அல்ல என்பதும், வேறு ஒருவர் என்பதும் தெரியவந்தது.
இதனால் அந்த முதியவர் ஏமாற்றத்துடன் மேடையிலிருந்து இறங்கி சென்றார். இந்தச் சம்பவத்தை பார்த்த அனுஸ்ரீ மிகவும் உணர்வுபூர்வமாகக் கண்ணீரை தடுத்துக்கொள்ள முடியாமல் பின்புறமாக நின்று அழ ஆரம்பித்தார். அந்த சூழ்நிலையை புரிந்த அந்த துணிக்கடை அதிபர், அப்பெருமக்களுக்கு ஆறுதல் பரிசாக ஒரு தொகையை நேரடியாக தனது கையில் வழங்கினார்.அந்த முதியவருக்கு பரிசு கிடைத்ததையடுத்து, அனுஸ்ரீயின் முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. பின்னர் உரையாற்றிய அவர், “இந்த நபருக்கு குறைந்தபட்சமாக ஒரு சிறிய பரிசாவது இன்று வழங்கப்படவில்லை என்றால், இன்று இரவு நான் அமைதியாக உறங்க முடியாது” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.இந்த சம்பவம் அங்கிருந்தோர் அனைவருக்கும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.