நடிகர் விதார்த் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தை கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். இதில் பிரபல நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு, சஞ்சித், அபிராமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

மேலும் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீலயா முக்கியமான வேடத்தில் பங்கேற்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். இசை அமைப்பாளராக டி. இமான் பணியாற்ற, ஒளிப்பதிவை கவியரசு மேற்கொள்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் கே.எஸ்.அதியமான் கூறுகையில், “அம்மா – மகன் பாசம், கணவன் – மனைவி உறவுகள் மற்றும் காதல் சம்பந்தமான உண்மையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவானது இந்த கதை. இதனை அனைவரும் உணர்வோடு தங்களுடைய வாழ்க்கையுடன் இணைத்து பார்க்க முடியும். இது உண்மையான கதைதான் எனத் தெரிவித்துள்ளார்.