பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய பாபு விஜய், தற்போது ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்காக தற்போது அளித்த பேட்டியில், பாபு விஜய் ‘சர்கார்’ பட காலத்தில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அவரது பேட்டியின்படி, ‘சர்கார்’ படம் உருவாகிக் கொண்டிருந்த போது, நடிகர் விஜய் உடன் எனக்கு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் விஜய் சார் அவரிடம் கதை சொல்ல வரச் சொன்னார்.
அப்போது எனது கதையை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சொன்னேன். கதையை கேட்ட, விஜய் சார், “இந்தக் கதையில் நான் நடிப்பது சற்று கடினம். நீங்கள் ஏன் கதை சொல்ல வரச் சொன்னீர்கள் என்று என்னிடம் நீ கேட்கலாம். ஆனால் உன் கதைக்களம் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள விரும்பி கேட்டேன். உன் கதை நன்றாக உள்ளது. ஒரு படத்தை முடித்த பிறகு கண்டிப்பாக வா, பார்க்கலாம், என்றார். இதுவே விஜய் சாரின் அற்புதமான மனம் என்றுள்ளார் பாபு விஜய்.