அஷ்வின் குமார் இயக்கத்தில் உருவான மிகப்பெரிய அனிமேஷன் திரைப்படம் “மஹா அவதார் நரசிம்ஹா” கடந்த வாரம் வெளியானது. இந்த படம் விஷ்ணு பகவானின் பக்தனாகிய பிரகலாதன் தொடர்பான கதையை மையமாகக் கொண்டது.

இந்த படம் தினசரி வசூலில் உயர்ந்த வளர்ச்சியுடன் செல்லும் நிலையில், முதல் நாளில் 1.75 கோடி, இரண்டாம் நாளில் 4.6 கோடி, மூன்றாம் நாளில் 9.5 கோடி மற்றும் நான்காம் மற்றும் ஐந்தாம் நாளில் இணைந்து 13.7 கோடி வசூலித்துள்ளது. இவ்வாறு, வெளியான ஐந்து நாட்களில் மொத்தமாக 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வருங்காலத்தில் மேலும் அதிகமாக வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு வந்த நல்ல வரவேற்பை கருத்தில் கொண்டு, இது இன்று இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் யூரோப்பில் உள்ள முக்கிய நகரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த சினிமாடிக் யூனிவெர்ஸ், விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் திரைப்படமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தொடரின் படங்கள் 2025 முதல் 2037 வரை ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.