இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான “தலைவன் தலைவி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாகும் நிலையை எட்டியுள்ளது.

முன்னதாக நடிகர் சூர்யாவை வைத்து “எதற்கும் துணிந்தவன்” எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். ஆனால், அந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய பாண்டிராஜ் , “எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெற்றி பெறாததற்கான முழு காரணமும் நானே. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தினைப் போன்ற இன்னொரு பெரிய வெற்றியை உருவாக்க வேண்டும் என்ற ஆசையோடு வேலை செய்தோம். ஆனால், திட்டமிட்டபடி அமையவில்லை. நடிகர் சூர்யாவுக்கும், தயாரிப்பாளருக்கும் படம் மகிழ்ச்சியைத் தந்தாலும், சரியான வசூல் அளிக்கவில்லை. அதன்பின்னர் சூர்யா நடித்த எந்தப் படமும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வசூலைத் தாண்டவில்லை என்று என கூறியுள்ளார்.