‘ஹனுமன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தேஜா சஜ்ஜா. இவர் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘மிராய்’. ரித்திகா நாயக் நாயகியாக நடிக்கிறார். கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். மனோஜ் மஞ்சு வில்லனாக நடிக்கிறார். ஷ்ரியா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனத்தின் சார்பில் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். தற்போது இந்த படத்தில் இருந்து ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கவுரா ஹரி இசை அமைத்துள்ளார். இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி முதல் 8 மொழிகளில் வெளியாகிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.
