ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியான தெலுங்குப் படம் ‘ஹரிஹர வீரமல்லு’. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு முதலில் அதிகமாக இருந்ததால் வெளியீட்டிற்கு முன்பாக நல்ல முன்பதிவு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்பு படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியானது படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்தது. படத்தில் இடம் பெற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் தரம் குறைவாக இருந்ததாக கடும் விமர்சனங்கள் வந்தன. இதனால், படத்தில் அந்தக் காட்சிகளைக் குறைக்க முடிவு செய்து, சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை குறைத்துள்ளார்களாம்.
