நடிகர் சித்தார்த் நடிப்பில், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘3BHK’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ், “3BHK எனது மூன்றாவது படம். சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். நான் சிறுவயதில் இருந்தபோது எங்கள் குடும்பம் பல வீடுகளுக்கு வாடகைக்கு மாறி வாழ்ந்த அனுபவம் உள்ளது. இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த அனுபவத்தை எதார்த்தத்தை மாற்றாமல், ஒரு நடுத்தர குடும்பம் எப்படி சொந்த வீட்டு கனவில் வாழ்கிறது, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரஸ்யமாகவே படம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் 3BHK படத்தை இயக்கினேன். .

எனக்குத் தோன்றியதுபோலவே, படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை இந்தப் படத்தில் பார்த்த உணர்வோடு மக்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுகள் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றன. என் குடும்பத்தினரும் இப்படத்தை பார்த்து பெரும் உணர்ச்சி ஆழத்தில் மூழ்கினர். படம் திரையிடப்பட்ட எல்லா திரையரங்குகளிலும் கொண்டாடப்படுகிறதே என்பதிலே பெருமை இருக்கிறது,” என தெரிவித்தார்.
நடிகர்கள் சரத்குமார், சித்தார்த் மற்றும் நடிகை தேவயானி ஆகியோரின் தேர்வும், அவர்கள் எந்தவொரு பாத்திரத்தையும் திறமையாக செய்தது குறித்து அனைவரும் பாராட்டுகிறார்கள். இவர்களைத் தேர்வு செய்ததற்கு காரணம், அந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களே ஏற்றவர்கள் என எனக்குத் தோன்றியது. அதிரடி ஹீரோவாக இருக்கும் சரத்குமாரை மென்மையான ஓர் பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது குறித்து சினிமா உலகமே பாராட்டுகிறது. அடுத்த கதையின் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ‘3BHK’-ஐ விட மேலும் சிறப்பாக உருவாக வேண்டும் என்ற அழுத்தம் இருப்பதோடு, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை அளித்தால் மக்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள் என்பதையும் நம்புகிறேன். ‘3BHK’ படத்தின் வெற்றி இதைத் தான் நிரூபிக்கிறது,” என்று கூறினார்.