நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான் சிறப்பு தோற்றத்திலும் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.வரும் ஆகஸ்ட் 14ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் “அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன். இது நூறு சதவீதம் உறுதிதான். அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையா இருக்கிறது. அவரின் மேலாளர் மூலமாக சில மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. நிச்சயமாக இது நடக்கும். சரியான நேரத்தில் எல்லாம் சரியாக அமைந்தவுடன் அவரின் படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.