மார்கன் பட வெற்றியை தொடர்ந்து, விஜய் ஆண்டனி தனது 25வது படமாக சக்தித் திருமகன் படத்தில் நடித்துள்ளார். அருண் பிரபு எழுதி இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 5 அன்று திரைக்கு வரவுள்ளது.

படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற விஜய் ஆண்டனி கேக்குக்கு பதிலாக பிரியாணி வெட்டி அவனது பிறந்த நாளை கொண்டாடினார் . அப்போது இசையமைப்பாளர் சாய் அபயங்கர் குறித்து விமர்சனங்களுக்கு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், சாய் அபயங்கர் திறமையானவர். அவர் திறமையின் காரணமாகவே அனைவரும் அவரை தேடி வருகிறார்கள். சாய் அபயங்கர் இசையமைத்த ஒரு படமும் இன்னும் வெளியாகவில்லையென்றாலும், முன்னணி நடிகர்களின் 8 படங்கள் தற்போது அவரிடம் உள்ளன. சாம் சி.எஸ். மற்றும் சாய் அபயங்கர் இருவருமே தனித் தன்மை கொண்டவர்கள் என்றார். சமீபத்தில் சாம் சிஎஸ் மற்றும் சாய் அபயங்கர் குறித்த விமர்சனங்கள் பல வலம் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.