ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனிருத் இசையமைக்க, அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பேட்டியில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது:
‘நான் ‘இனிமேல்’ இசை வீடியோ ஆல்பத்தில் நடித்திருந்தபோது, லோகேஷ் ‘கூலி’யின் கதையை என்னிடம் கூறினார். இதில் நான் சத்யராஜ் சார் மகளாக நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் மிக வலிமையானது எனக் கூறியுள்ளார்.