‘கோமாளி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டே, அதன்பின் ‘பப்பி’, ‘தேள்’, ‘மன்மத லீலை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து தனது உடல்திறனை மேம்படுத்தி வரும் சம்யுக்தா, சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் ஒரு வலிமையான கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், “நாங்களும் ஆண்களைப் போல் கைகளில் புடைக்கும் நரம்புகளை விரும்புகிறோம். ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை நாங்களும் கடைபிடிக்கிறோம். வலிமைக்கு பாலின வேறுபாடு கிடையாது. ஜிம் என்பது வலிமையை கொண்டாடும் இடம். பெண்கள் புதிய முயற்சிகளில் அங்கீகரிக்கப்படும்போது, தடைகள் குறையும். நாங்களும் மனிதர்களே. கடினமாக உழைத்து, பலவீனங்களை வலிமையாக்கிக்கொள்கிறோம்” என உறுதியுடன் கூறியுள்ளார்.