Touring Talkies
100% Cinema

Sunday, July 27, 2025

Touring Talkies

சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் – நடிகை‌ நிமிஷா சஜயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான நிமிஷா சஜயன், ‘சித்தா’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர். அதன் பின்னர் அதர்வா உடன் இணைந்து நடித்த ‘டி.என்.ஏ.’ திரைப்படம் அவரது தமிழ் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. சமீபத்திய பேட்டியில் நிமிஷா தெரிவித்ததாவது: “கதையின் மையமாக என் கதாபாத்திரம் இருக்கும் படங்களில் நடிப்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. எந்த வேடமாயினும் சரி, அது கதைக்கு முக்கியத்துவம் கொண்டதா என்பதே என் கவனக்கேந்திரம்.

விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அது உண்மையாயின் ஏற்றுக்கொள்வேன். மாற்ற வேண்டிய இடமிருந்தால் மாற்றிக்கொள்வேன். ஆனால் தேவையில்லாத விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டேன்.‘டி.என்.ஏ.’யில் எனது வேடம் ஒரு அம்மா கதாபாத்திரம். எனக்குத் திருமணம் ஆகாதபோதும், அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ப என்னை உணர்ச்சிபூர்வமாக தயார் செய்துக்கொள்வேன். நடிப்பு என்பது தவம் என நான் நினைக்கிறேன். அதற்காக தேவையான தியாகம் செய்ய தயார்.

இந்த படம் சிறிய பட்ஜெட்டில் உருவானாலும், அதற்கான வரவேற்றப்பும், பாராட்டுகளும் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன. பெரிய பட்ஜெட்ட படங்களின் வெற்றி சாதாரண விஷயம். ஆனால் குறைந்த செலவில் உருவாகும் படம் வெற்றி பெறுவது தான் சவாலான விஷயம். எனவே ‘டைரக்டர்ஸ் ஆக்ட்ரஸ்’ என்று அழைப்பது பெருமையளிக்கிறது,” என்றார் நிமிஷா.

- Advertisement -

Read more

Local News