சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கூலி’. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். இதில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும், பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘கூலி’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் என்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனிடையே, திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வருடம் ஆகஸ்ட் 2ஆம் தேதி, சென்னை நகரில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு ஒரு சிறப்பான ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.