இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‛ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் நடிகர் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இப்படம் நேரடியாக அரசியல் கதையாக இல்லாவிட்டாலும், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கும் நேர்மையான போலீசாக விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சில அறிவுரைகள் வழங்கும் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனவாம். இந்தக் கதையின் மூலம் உண்மையான ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும், மக்கள் தங்களது தலைவர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என விஜய் இப்படத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.