லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யூனிவர்ஸில் கைதி, விக்ரம், லியோ மற்றும் தற்போது உருவாகிவரும் பென்ஸ் உளிட்ட படங்கள் உள்ளன. மேலும் லோகேஷ் கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 ஆகிய படங்கள் எதிர்காலத்தில் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த எல்.சி.யுவில் ஒரு புதிய நடிகை இணைய இருப்பதாக லோகேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், நான் ஒரு நடிகைக்காக கதை எழுதுகிறேன், அது எல்.சி.யுவில் புதிய கதாபாத்திரமாக இருக்கும். ‘குறிப்பாக ‘கைதி 2’ சில புதிய கதாபாத்திரங்கள் உள்ளன என்றுள்ளார். முன்னதாக அனுஷ்கா ஷெட்டி கைதி 2ல் இணைய உள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாகார்ஜுனா, சவுபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.