‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்குப் பிறகு, மகேஷ்பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்துவருகிறார். மேலும் மலையாளத் திரையுலக நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், ராஜமௌலி இயக்கும் விதம் குறித்த தகவலை பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

அதில், “ஒரு கதைக்கு ‘ஸ்கேல்’ இல்லாத வண்ணம் இயக்குநர் ராஜமௌலி எப்போதும் மிகப் பெரிய பின்னணிகளைத் தேர்வு செய்கிறார். அவர் பெரிய காட்சிகள் மற்றும் பிரமாண்டமான உருவாக்கங்கள் மூலம் கதையை சொல்லும் திறமையில் சிறந்தவர்.
பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களில் அவர் கதையின் உணர்வுகளையும், பிரமாண்டத்தையும் கொடுத்து சிகரம் தொட்டார். கதையை சொல்வதில் அவர் கொண்டுள்ள ஆழம் மற்றும் காட்சிகளின் உண்மைத்தன்மை, அவரை எப்போதும் சிறந்த இயக்குநராகத் தக்க வைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.