Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

இந்தியாவில் 100 கோடி வசூலை அள்ளிய F1 ஹாலிவுட் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் பிராட் பிட் நடித்துள்ள “எஃப்1” திரைப்படம், கார் பந்தயத்தை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான இப்படம், பரபரப்பான திரைக்கதை மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பின் மூலம் உலகளவில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இமக்ஸ் திரையில் இந்தப் படத்தை கண்ட ரசிகர்கள், அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டனர். இப்படத்தை ஜோசஃப் கொசின்ஸ்கி இயக்கி, ஆப்பிள் நிறுவனம் தயாரித்து, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

உலகளவில் ரூ.2500 கோடிக்கும் மேற்பட்ட வசூலுடன் இப்படம் முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக வார்னர் பிரதர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News