விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைவன் தலைவி’ இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் யோகி பாபு, பாபா பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 25-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் விஜய் சேதுபதி, பரோட்டா கடையில் வேலை பார்க்கும் ஒருவராக (பரோட்டா மாஸ்டர்) நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லர் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில், நித்யா மேனன் ஒரு பேட்டியில், மதுரையில் ஷூட்டிங் நடந்த போது, பரோட்டா மீதான என் ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை. நிறைய பரோட்டா சாப்பிட்டேன். சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், பரோட்டா போட கற்றுக்கொண்டேன். ஓய்வு நேரங்களில் கூட பரோட்டா சாப்பிட்டேன் என கூறியுள்ளார்.