2014ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த ராஜமவுலி இயக்கிய திரைப்படம் “ஈகா” (தமிழில் “நான் ஈ”). நானி மற்றும் சமந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கதையின் நாயகன் இறந்த பின்பு ஈ வடிவத்தில் திரும்பி வந்து, தனது மரணத்திற்கு காரணமான வில்லனை பழிவாங்குகிறான் என்பதே கதையின் மையம். இந்த வித்தியாசமான கதைக்களம் பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

சமீபத்தில் நடிகை ஜெனிலியா நடித்திருக்கும் “ஜூனியர்” திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமவுலி, அந்த விழாவில் பேசும் போது, “ஈகா” எனது படைப்புகளில் சிறந்த படமாகும் என குறிப்பிட்டார்.
அந்த நிகழ்வில் ராஜமவுலி கூறியதாவது, “ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘சிம்ஹாத்ரி’ திரைப்படம் வெளியாகிய பிறகு, நான் வெறும் கமர்ஷியல் படங்களை இயக்கக்கூடியவன் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அந்த வார்த்தைகளை மாற்றும் வகையில், ஒரு வித்தியாசமான முயற்சியாக நான் ‘ஈகா’ படத்தை இயக்கத் தீர்மானித்தேன்” என தெரிவித்துள்ளார்.