தெலுங்குத் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின்னர் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்தவர் ராணா டகுபதி. தயாரிப்பாளராக உள்ள அவரது தந்தையின் பாதையில், அவர் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.அந்தவகையில் தற்போது, துல்கர் சல்மான் நடித்துவரும் “காந்தா” என்ற திரைப்படத்தை, துல்கருடன் இணைந்து தயாரித்து வருகிறார். இந்தப் படம் ஒரு வரலாற்று பின்னணி கொண்ட பீரியட் படமாக உருவாகி வருகிறது. இதை இயக்குபவர் செல்வமணி செல்வராஜ் ஆவார்.

சமீபத்திய பேட்டியில் ராணா டகுபதி கூறுகையில், “ஒவ்வொரு கதைக்கும் அதற்கேற்ற நடிகர்கள் தானாகவே வருகிறார்கள். சில கதாபாத்திரங்களுக்கு பலர் பொருந்தினாலும், ஒரு தயாரிப்பாளராக எனக்கு இந்தக் கதைக்குத் துல்கர் சல்மான் மட்டுமே பொருத்தமானவர் என்று தோன்றியது. அவர் இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்தப் படத்தை உருவாக்க முடியாது என்பதே என் நிலைப்பாடு.
துல்கர், தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் உள்ள அழகியலான தன்மையை அழுத்தமாக வெளிப்படுத்தக் கூடிய நடிகர். அதனால் அவரிடம் இருக்கும் கலை நுணுக்கம் மூலம் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என தெரிவித்தார்.