வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு மற்றும் தமிழ் சிவலிங்கம் ஆகியோரின் தயாரிப்பில், பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், சோனேஸ்வரி மற்றும் பேரரசு ஆகியோர் நடித்திருக்கும் ‘சென்ட்ரல்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் விழாவில் பேசிய பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், சினிமாவில் இருப்பவர் என்றாலே பெண் கொடுக்க தயங்குவார்கள் , சிலர் அவர்களை மதிக்க விருப்பப்படமாட்டார்கள். இதேபோல், சினிமாக்காரர்கள் அரசியலுக்குப் போகக்கூடாது என்றும் சிலர் சொல்வதைக் கேட்டுள்ளோம்.
ஆனால், இப்படிச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர்கள் அரசியலுக்கு வந்த பின்பு என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்” எனக் கூறினார்.இதன் மூலம், சினிமாவிலுள்ள ஒருவரை அரசியலுக்குச் செல்லக்கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார்.