கன்னட சினிமாவின் பிரபல நடிகராக விளங்கும் ரிஷப் ஷெட்டி, அடுத்து மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவல்கள் படி, “லகான்”, “ஸ்வதேஷ்”, “ஜோதா அக்பர்” போன்ற வரலாற்று திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் அசுதோஷ் கோவரிகருடன் ரிஷப் ஷெட்டி இணைந்துள்ளார்.

இந்த புதிய படம், விஜயநகரப் பேரரசை ஆண்ட ஸ்ரீ கிருஷ்ணதேவராயரை மையமாகக் கொண்ட வரலாற்று பின்னணியில் உருவாக இருக்கிறது. இதில் பல தென்னிந்திய மற்றும் ஹிந்தி சினிமா நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரிஷப் ஷெட்டி, “காந்தாரா 2” மற்றும் “ஜெய் அனுமான்” போன்ற இரண்டு பிரமாண்டமான படங்களில் நடித்து வருகிறார். இவரது அடுத்த படமாக உருவாகும் இந்த வரலாற்றுத் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.