சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் அமீர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, “கூலி” திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், அதுவரை படத்தைப் பற்றிய எந்தவொரு தகவலும் பகிர விரும்பவில்லை என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய “மோனிகா” பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. “கூலி” திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.