நடிகர் சிம்பு, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் பத்து நாட்களில் அவர் 10 கிலோ எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. வடசென்னை பகுதிகளை மையமாக கொண்ட கேங்ஸ்டர் கதைக்கருவில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது. இதுபற்றி ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. சிம்பு இத்திரைப்படத்தில் இளமையான தோற்றத்துடன் மற்றும் முதுமையான ஒரு தோற்றத்திலும் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.