தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் பேசும் போது அவர், “திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், காதல் மற்றும் விசுவாசம் ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கிறது. திருமணம் என்ற எண்ணத்தில் எனக்கு பயம் இருக்கிறது. என் வாழ்க்கையை நானாகவே உருவாக்கினேன். அதற்குள் தாலி கட்டுவது, திருமண ஒப்பந்தத்திற்கான சான்றிதழ்கள் போன்றவை எனக்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. அவை மதிப்புடையவை என்று புரிந்தாலும், அவற்றை மதிக்க வேண்டிய ஆவணங்கள் எனக்கு தேவையில்லை.

ஒரு முறை திருமண முடிவின் அருகே சென்றிருந்தேன். ஆனால் அது எனக்கு ஏற்றதாக அமையவில்லை. பொருந்தாத விஷயங்களை ஏற்க முடியாது. திருமணம் என்பது சாதாரண விஷயம் அல்ல. இது இரண்டு நபர்களின் உறவை மட்டும் குறிக்கவில்லை, குழந்தைகள், வருங்காலம் மற்றும் வாழ்நாள் முழுவதும் பகிர்ந்து கொள்ளும் பொறுப்புகளை குறிக்கிறது. எனக்கு எப்போதும் ஒரு நாள் தாயாக வேண்டுமென ஆசை இருக்கிறது.
ஆனால் கணவர் இல்லாமல் குழந்தையை வளர்க்க விரும்பவில்லை. குழந்தை வளர்ச்சிக்குத் தேவையானது பொறுப்பான பெற்றோர்கள். சிங்கிள் மதர்களின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. வேண்டுமானால் தத்தெடுக்கும் எண்ணத்தையும் நான் யோசிக்கலாம். குழந்தைகள் எப்போதும் ஒரு அதிசயமே. தற்போது நான் சிங்கிளாகவே இருக்கிறேன். என்னையே நான் மிகவும் நேசிக்கிறேன். சிலர் தனிமையை நிரப்ப காதலர்களை தேடுகிறார்கள். ஆனால் நான் தனியாக இருப்பதை விரும்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.