கேரளாவில் நடைபெற்ற கேடி தி டெவில் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷில்பா ஷெட்டி, ‛‛மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஹிந்தியை தவிர, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துள்ளேன். மலையாளத்திலும் சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் பயம் காரணமாக நடிக்க சம்மதிக்கவில்லை. ஏனெனில், மலையாளத்தில் என் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் மலையாளத்தில் நடிப்பேன். இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். பாசில் இயக்கிய ‘நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு’ என்ற மலையாளப் படம் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று” எனப் பேசியுள்ளார்.
