பாண்டிராஜ் இயக்கத்தில் ‘தலைவன் தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி, இதற்கிடையே தற்போது இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை தபு நடிக்கிறார் என்று முன்பே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கிடைத்த புதிய தகவலின்படி, அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரியாக, வில்லி வேடத்தில் நடித்துவருகிறார் என கூறப்படுகிறது.
தபு சமீப காலமாக அம்மா, அத்தை போன்ற மென்மையான வேடங்களிலும், சில நேரங்களில் கவர்ச்சிகரமான மற்றும் வில்லி கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். ஆனால், அவற்றில் வில்லி வேடங்கள்தான் அதிகமாக பாராட்டைப் பெற்றிருப்பதால், அந்த கோணத்தில் பூரி ஜெகன்னாத் அவரின் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஒரு பயங்கர வில்லியாக வடிவமைத்து நடிக்க வைக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.