லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், ரஜினி சாரும் என் அப்பாவும் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள். மற்றவர்களை போல் நானும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்றே அவரை அறிந்துள்ளேன். ஆனால் கூலி படப்பிடிப்பின் போது அவருடன் பணியாற்றியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரஜினி சார் பல குணாதிசயங்கள் கொண்ட தனித்துவமான மனிதர். அன்பாவர், புத்திசாலி, கத்தியை போல கூர்மையானவர் மட்டுமின்றி மிகவும் அமைதியானவர்.
படப்பிடிப்பு தளத்தில் அவ்வளவு ஒரு எனர்ஜியை கொண்டு வருகிறார். அவருடன் பணியாற்றும் போது அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.