நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69-வது படம் ஜன நாயகன். சமூகப் பிரச்சினை அரசியல் பேசும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில், படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் கேடி தி டெவில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது அதில் பங்கேற்ற கேவின் புரொடக்ஷன் நிறுவனவர் சுப்ரித், ஜன நாயகன் படத்தினை குறித்த கேள்விக்கு, ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.