‘சஹேபா’, ‘மேஸ்ட்ரோ’, ‘டார்லிங்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை நபா நடேஷ், ‘தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை’ என்று தெரிவித்துள்ளார். தெலுங்கு திரைப்படம் ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார்.’தெலுங்கு சினிமாவை போல தமிழ் சினிமாவையும் நான் மதிக்கிறேன். தமிழிலும் படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்று நபா நடேஷ் தெரிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மட்டுமே கலக்கி வந்த நபா நடேஷ், தமிழ் சினிமாவில் எப்போது தலைகாட்டுவார்? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.
