வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் கலையரசன், மீனாட்சி ஆனந்த் தயாரித்து சிவராஜ் இயக்கியுள்ள ‘டிரெண்டிங்’ என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியாலயா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

பட வெளியீட்டு விழாவில் கலையரசனிடம், “நீங்கள் ஒரு படத்துக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் சம்பளம் கேட்டதாக உங்களது மானேஜர் மூலம் தகவல் வந்ததாம், இது உண்மையா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு கலையரசன் பதிலளிக்கையில், “இது முற்றிலும் தவறான செய்தி. எனக்கு மானேஜர் கிடையாது. நான் அந்த அளவுக்கு சம்பளம் வாங்குவதில்லை. யாரும் எனக்கு அந்த அளவிலான தொகையை வழங்கியதும் கிடையாது. ஒரு காலத்தில் மாதம் ரூ.30,000 சம்பளம் வந்தால்தான் சந்தோஷமாக இருந்த நான், இப்போது ஒரு ஓரளவு நிலைமையை அடைந்துள்ளேன்.நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்றால், எனது சம்பளத்தையே குறைத்துக் கொள்கிறேன். இரண்டு படங்களில் இன்னும் சம்பளம் வரவில்லையே என்றே நிலைமை உள்ளது. அந்த பணம் வந்தால், அதைத்தானே வைத்து நான் இரண்டு படங்களை தயாரிக்கலாம்” எனத் தெரிவித்தார்.