இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022ஆம் ஆண்டு மிகுந்த பரபரப்புடன் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், தங்களின் திருமணத்தை பிரமாண்டமான அளவில் நடத்தினர் மட்டுமல்லாமல், அதன் ஒட்டுமொத்த நிகழ்வையும் ஆவணமாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு உயிர் – உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து செய்யவுள்ளனர் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. மாதிரியான செய்திகள் வெளியிட்டன.
இவை அனைத்துக்கும் பதிலாக, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட வேடிக்கை பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்துடன், “எங்களைப் பற்றிய வதந்திகளை பார்க்கும் போதைய எங்களது ரியாக்ஷன் இதுதான்” என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.