கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. காதல், காமெடி, ஆக்ஷன், வரலாற்று கதைகள் என பல விதமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்திலும், பி.எஸ். மித்ரன் இயக்கும் ‘சார்தார் 2’ படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு பிறகு ‘டாணாக்காரன்’ பட இயக்குனர் தமிழின் இயக்கத்தில் கார்த்தி தனது 29வது படத்தில் நடிக்கவுள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கடலை மையமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் படமாக இது உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கு மார்ஷல் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி கேமியோ வேடத்தில் நடிப்பார் என தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளார் எனவும் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. .